357 மில்லியன் சிறுவர்கள் மோதல் பகுதிகளில்! 

Friday, February 16th, 2018

உலகில் ஒவ்வொரு ஆறு சிறுவர்களில் ஒரு சிறுவர் மோதல் வலயத்துக்குள் வாழ்ந்து வருவதாக சர்வதேச சிறுவர் காப்பகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் ஆயுத மோதல் காரணமாக சிறுவர்கள், அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும், 357 மில்லியன் சிறுவர்கள் மோதல் வலயத்தில் வாழ்ந்து வருகின்றனர். 1995 முதல் தற்போது வரையான காலப்பகுதிக்குள் 200 மில்லியனிலிருந்து நூற்றுக்கு 75 சதவீதத்தால் இந்த நிலைமை அதிகரித்துள்ளதாக குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியா முதலான நாடுகள் சிறுவர்களுக்கு மிகவும் ஆபத்தான இடங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.

அத்துடன், மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த சிறுவர்களும் மோதல் வலயத்தில் வாழ்ந்து வருவதாக சர்வதேச சிறுவர் காப்பகத்தின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: