சூடான் மோதல் – யுனிசெஃப் ஆதங்கம்!

Monday, May 8th, 2023

சூடானில் நடந்து வரும் மோதல் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான போலியோ தடுப்பூசிகள் அழிக்கப்பட்டுள்ளன.

தெற்கு டார்ஃபர் பகுதியில் சூறையாடப்பட்ட அல்லது எரிக்கப்பட்டதால் சேமித்து வைக்கப்பட்ட தடுப்பூசிகள் அழிக்கப்பட்டதாக யுனிசெஃப் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் போலியோ வைரஸால் பாதிக்கப்படலாம் அல்லது இறக்கலாம் என்றும் யுனிசெஃப் கூறியுள்ளது.

கடந்த வருடம் முதல் மலாவி, மொசாம்பிக் மற்றும் சூடான் போன்ற நாடுகளில் இருந்து நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏப்ரல் 15 முதல் சூடானில் இடமபெற்றுவரும் மோதலினால் 13 முதல் 14 மில்லியன் டொலர்கள் வரை பொருட்கள் இழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

உலக உணவுத் திட்டம் உள்ளிட்ட மனிதாபிமான நிவாரண நிறுவனங்களின் உதவிகள் கொள்ளை அடிக்கப்பட்டதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts: