தான்சானியா ஜனாதிபதியின் இறுதி சடங்கில் ஏற்பட்ட நெரிசல் சிக்கி 45 பேர் பலி!

Wednesday, March 31st, 2021

தான்சானியா நாட்டில் ஜான் மெகுபுலி 2015-ம் ஆண்டு முதல் ஜனாதிபதியாக பொறுப்பு வகித்து வந்தார்.
கடந்த 17-ந் தேதி இவர் காலமானார். தான்சானியா நாட்டு மக்களின் ஆதரவை பெற்ற இவரது மரணம் அந்த நாட்டு மக்களை மிகவும் அதிர்ச்சி அடையவைத்திருந்தது. அவரது உடல் கடந்த வாரம் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஹிக்ரு மைதானத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
ஜான் மெகுபுலியின் உடலை காண்பதற்காகவும், இறுதி அஞ்சலி செலுத்தவும் லட்சக்கணக்கான மக்கள் குறித்த மைதானத்தில் குவிந்தனர்.
பலர் அந்த மைதானத்தின் சுவர் ஏறி குதித்து அங்கு சென்ற நிலையில் அப்போது திடீரென சுவர் இடிந்து விழந்தது. இதனால் அங்கு இருந்தவர்கள் சிதறி ஓடினார்கள்.
இதில் சுவரின் இடிபாடுகளிலும், கூட்ட நெரிசல்களிலும் சிக்கி 45 பேர் உயிரிழந்துள்ளதாக தான்சானியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மறைந்த ஜனாதிபதிக்கு அஞ்சலி செலுத்த சென்ற பொதுமக்கள் 45 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த நாட்டில் மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related posts: