அஞ்சப்போவதில்லை – சீனா!

Monday, November 25th, 2019


அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த விரும்புவதாகவும் அதே சமயம் வர்த்தக போரைப் கண்டு அஞ்சப்போவதில்லை எனவும் சீனா தெரிவித்துள்ளது.

சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற சர்வதேச நிதி ஆணையத்தின் கூட்டத்தில் உரையாற்றிய போது சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இதனைத் தெரிவித்துள்ளார்.

உலகின் இரு பெரும் பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடந்த ஓராண்டு காலமாக வர்த்தகப் போர் நடந்து வருகிறது. உலகளாவிய பொருளாதார மந்த நிலைக்கு இது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

சீனா நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை பின்பற்றி வருவதாகவும், அமெரிக்காவின் அறிவுசார் சொத்துக்களையும்இ தொழில் நுட்பங்களையும் திருடி வருவதாகவும் குற்றம் சாட்டி முதலில் இந்த வர்த்தகப் போரை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஆரம்பித்தார்.

இதையடுத்து சீனப் பொருட்கள் மீது அமெரிக்காவும்இ அமெரிக்க பொருட்கள் மீது சீனாவும் பல்லாயிரம் கோடி டொலர் வரிகளை கூடுதலாக விதித்து வருகின்றன. இதனால் இரு தரப்பு வர்த்தகப் போர் வலுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: