இந்திய – சாமோலி மாவட்டத்தில் சீனா திடீர் ஆக்கிரமிப்பு!

Thursday, July 28th, 2016

உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் சீனா திடீர் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது என்பதை அம்மாநில முதல்மந்திரி ஹரிஷ் ராவத் உறுதிசெய்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஹரிஷ் ராவத், “இதுதொடர்பான செய்திகள் உண்மையானதே, நிலையானது எச்சரிக்கையானதாக உள்ளது. நம்முடைய எல்லைப் பகுதியானது இப்போது வரையில் அமைதியாக உள்ளது. முதலில் இருந்தே நாங்கள் கண்காணிப்பை அதிகரிக்க கேட்டுக் கொண்டோம்.” என்று கூறிஉள்ளார். உத்தரகாண்ட் மாநில வருவாய்துறை அதிகாரிகள் நிலத்தை அளவிட சென்றபோது சீன ராணுவத்தின் நகர்வை பார்த்து உள்ளனர் என்று அவர் கூறிஉள்ளார்.

மத்திய அரசு கவனம் செலுத்தும் என்றும் ஹரிஷ் ராவத் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் சீன ராணுவம் முக்கியமான கால்வாயை எட்டவில்லை என்பதுதான் என்று கூறிஉள்ளார்.

இந்தோ – திபெத்திய எல்லை பாதுகாப்பு படை இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கையை கடந்த 19ஆம் திகதி அனுப்பிஉள்ளது, திடீர் ஆக்கிரமிப்பு நடைபெற்ற அன்றே அறிக்கை அனுப்பிஉள்ளதாக தகவல்கள் தெரிவித்து உள்ளன என்று ஏ.என்.ஐ. செய்தி வெளியிட்டு உள்ளது.

இதற்கிடையே முன்னாள் உள்துறை செயலாளரும், இப்போதைய பாரதீய ஜனதா எம்.பி.யுமான ஆர்.கே. சிங் பேசுகையில், இந்தியா – சீனா இடையிலான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியானது இதுவரையில் வரையறை செய்யப்படவில்லை, “எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை வரையறை செய்ய நாங்கள் விரும்புகிறோம், ஆனால் சீனா ஒத்துழைப்பு அழிப்பது கிடையாது,” என்று கூறிஉள்ளார்.

இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் கடந்த வாரம் ஊடுருவி உள்ளது, சுமார் மணி நேரம் இந்திய ராணுவத்தின் எதிர்ப்பை எதிர்க்கொண்டது என்பதை அரசு உறுதிசெய்து உள்ளது என்று என்.டி.டி.வி. செய்திவெளியிட்டு உள்ளது. பின்னர் இருதரப்பும் தங்களது நிலைக்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எல்லையில் இந்தியா மற்றும் சீனா சொந்தம் கொண்டாடும் சுமார் 80 சதுர கிலோ மீட்டர் பரப்பிலான மேச்சல் நிலத்தில் திடீர் ஆக்கிரமிப்பு நகர்வு நடந்து உள்ளது என்று தகவல்கள் தெரிவித்து உள்ளன.

Related posts: