16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மரண தண்டனை!
Friday, July 26th, 2019
அமெரிக்காவில் சுமார் 16 ஆண்டுகால இடைவேளைக்கு பிறகு மீண்டும் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக அந்நாட்டு சட்டத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து கைதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு சிறைச்சாலை பணியகத்தை கேட்டுக்கொண்டுள்ளதாக அறிக்கையொன்றை வெளியிட்ட அந்நாட்டு அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார், தெரிவித்துள்ளார்.
மேலும், மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள குறித்த ஐந்து கைதிகளும் குழந்தைகள் அல்லது முதியவர்கள் தொடர்பான கொலை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று பார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து கைதிகளுக்காக மரண தண்டனை எதிர்வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் நிறைவேற்றுவதற்கு திகதி குறிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
எச்சரிக்கை ! கள்ள நோட்டுகள் புழக்கம் !!
போராளிகளுக்கு பொதுமன்னிப்பு!
இராணுவங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா - அமெரிக்கா உறுதி!
|
|
|


