போராளிகளுக்கு பொதுமன்னிப்பு!
Tuesday, July 11th, 2017
கொலம்பியாவின் ஆயுதக் குழுவான ஃபார்கின் போராளிகள் 3600 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவதற்கான சாசனத்தில் அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோன் மெனுவேல் சந்தோஸ் கைச்சாத்திட்டுள்ளார்.
இதன்படி இதுவரையில் 7 ஆயிரம் முன்னாள் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஃபார்க் ஆயுதக் குழுவினர் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்கும் பணிகளை நிறைவு செய்திருந்தனர். நீண்டகாலமாக அங்கு இடம்பெற்று வந்த உள்நாட்டு யுத்தம் அமைதி உடன்படிக்கையின் அடிப்படையில் நிறைவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாலஸ்தீன சிறுமியை கொடூரமாக கொன்ற யூதர்!
லொரி கவிழ்ந்து கோர விபத்து - மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!
நீண்டகாலமாக இருந்து வரும் கடல்துறை சர்ச்சைகளுக்கு நட்புமுறையுடன் தீர்வு காண வேண்டும் - சீன வெளியுறவு...
|
|
|


