தற்போதைய நெருக்கடி திடீரென உருவாகவில்லை – இலங்கையின் நிலைமையை உன்னிப்பாக அவதானிப்பதாக பிரித்தானியா அறிவிப்பு!
Wednesday, May 18th, 2022
இலங்கையில் உணவுப்பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் உட்பட அனைத்து நிலைமைகளையும் உன்னிப்பாக அவதானித்துவருவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது.
உணவுப்பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் உட்பட இலங்கையின் பொருளாதார நிலைமையை உன்னிப்பாக அவதானித்துவருகின்றோம் என தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார பொதுநலவாய அமைச்சர் தாரிக் அஹமட் பிரபு இலங்கையின் கடன்நிலை தொடர்ந்தும் தாங்கிக்கொள்ள முடியாத விடயம் என சர்வதேச நாணயநிதியம் மதிப்பிட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடனை பேண்தகுநிலைக்கு மாற்றுவதற்கு அவசியமான சீர்திருத்தங்கள் நிதி உதவிகள் குறித்து சர்வதேச நாணயநிதியத்துடன் மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகளை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையின் தற்போதைய நெருக்கடி திடீரென உருவாகவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வட்டக்கச்சி மாயவனூர் மத்தி கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உபகரணங்கள் வழங...
ரயில்வே திணைக்களத்தின் பயன்பாட்டில் 105 இயந்திரங்கள்!
சீனாவிலிருந்து மேலும் 20 இலட்சம் தடுப்பூசிகள் ஜுன் முதல் வாரத்தில் கிடைக்கும் - இராஜாங்க அமைச்சர் பே...
|
|
|


