சீனாவிலிருந்து மேலும் 20 இலட்சம் தடுப்பூசிகள் ஜுன் முதல் வாரத்தில் கிடைக்கும் – இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Wednesday, June 23rd, 2021

ஜூலை முதல் வாரத்தில் மேலும் 20 இலட்சம் ‘சினோபார்ம்’ தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கை மருந்தக கூட்டுத்தாபனத்தால் சீனாவின் ‘சினோபார்ம்’ தடுப்பூசி நிறுவனத்திடமிருந்து இந்தத் தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

இதனிடையே, நாட்டில் கோவிஷீல்ட்டின் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 9 இலட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கும், இரண்டாவது டோஸ் 3 இலட்சத்து 72 ஆயிரத்து 290 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

‘சினோபார்ம்’ தடுப்பூசியின் முதலாவது டோஸ் 14 இலட்சத்து 4 ஆயிரத்து 470 பேருக்கும், இரண்டாவது டோஸ் 4 இலட்சத்து 55 ஆயிரத்து 592 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஸ்பூட்னிக் தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 454 பேருக்கும், இரண்டாவது டோஸ் 14 ஆயிரத்து 301 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனாத் தடுப்பூசியின் குறைந்தது ஒரு டோஸ் பெற்றுக் கொண்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 24 இலட்சத்து 82 ஆயிரத்து 166 ஆகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கொலை வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் !
இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது கொவிட் தடுப்பூசி - கொவிட் தொற்றுடன் வாழ்வதற்கு நாம் பழகிக் கொள்ள வேண்ட...
நீக்கப்பட்டது பயணக் கட்டுப்பாடுகள் – சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளைகளை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு பொ...