அமைச்சர் டக்ளஸ் 100 மில்லியன் ஒதுக்கீடு – திட்டங்களை இறுதி செய்வதற்கு பூநகரி ஜெயபுரம் கடற் தொழிலாளர்கள் சமாசத்தில் ஆலோசனை!!

Thursday, March 21st, 2024

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் 100 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டிலான திட்டங்களை இறுதி செய்வதற்கான  நேரடி கள விஜயம் பூநகரி ஜெயபுரம் கடற் தொழிலாளர்கள் சமாசத்தில் இன்று நடைபெற்றது.

இதில் கடற் தொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் கபில குணவர்தன தலைமையிலான பொறியியலாளர்கள் அடங்கிய அதிகாரிகளும்  கலந்து கொண்டு தேவையான ஆலோசனை வழிகாட்டலை வழங்கியிருந்தனர்.

இத்திட்டங்களை வரையறை செய்வதில் இதற்காக ஒதுக்கப்பட வேண்டிய நிதியின் அளவை மதிப்பிடுவது அவசியமான நடவடிக்கை என்பதோடு  திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது ஏனைய திணைக்களங்களின் அனுமதியை பெறுவதன் அவசியம் அதில் உள்ள நடைமுறை பிரச்சினைகளும் கவனம் செலுத்த ப்பட்டன.

ஒரே தினத்தில் மாவட்டம் தழுவி அனைத்து திட்டங்களையும் நேரடி அவதானிப்புக்குட்படுத்துவதற்கு வசதியாக  இரு அணிகளாக பிரிந்து இன்றைய களவிஜயம் நடைபெற்றது.

இதில்  பூநகரி தெற்கு மற்றும் வடக்கு வலயத்தின் கீழ் வரும் நாச்சிக்குடா, பள்ளிக்குடா, வெட்டுக் காடு, கௌதாரிமுனை,  பளை மற்றும் கண்டாவளை பிரதேசங்களின் கீழ் வரும் கடற் தொழிலாளர்கள் சங்கங்களால் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் நேரடியாக சென்று பார்வையிடப்பட்டன.

இச் சந்திப்பில் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள்,  ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட மற்றும் பிரதேச மட்ட பிரதிநிதிகள், கடற் தொழில் சங்க நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

000

Related posts: