வட்டுக்கோட்ட கொலை சம்பவம் – விசேட விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவிப்பு!

Friday, March 15th, 2024

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில், அண்மையில் தம்பதியர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தின் போது, கடற்படையினர் நடந்துகொண்ட விதம் குறித்து, இலங்கை கடற்படை விரிவான விசேட விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தின்போது கடற்படையினர் ஏதேனும் தவறு செய்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் 11 ஆம் திகதி, யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொன்னாலை கடற்படை முகாமிற்கு அருகில் ஒரு தம்பதியினர் கொடூரமாக தாக்கி கடத்திச் செல்லப்பட்ட நிலையில், கணவர் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இதன்போது குறித்த தம்பதியினர் பாதுகாப்பு தேடி கடற்படை முகாமுக்குள் சென்றவேளை அவர்களை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.

அத்துடன் வன்முறைக்குழுவினர் அவர்களை கடத்திச்செல்வதை தடுக்கவில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் இன்றைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரும் அடையாள அட்டை இலக்க நடைமுறை அமுலில் இருக்கும் - பொலிஸ்மா அதிபர் அஜித...
இலங்கையில் 100 அண்மிக்கும் கொரோனா மரணங்கள் – தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 21 நெருங்குகின்றது – சுகாத...
தொற்றா நோய்களையுடைய 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது தடுப்பூசி - 60 வயதுக்கு மேற்பட்டோரு...