சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் புதிய நடைமுறை !

Thursday, January 2nd, 2020

சாரதி அனுமதிப்பத்திரங்கள் பெறுவதற்கான மருத்துவ சான்றிதழ்களை பிராந்திய வைத்தியசாலைகளில் அடுத்த வாரம் முதல் பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கவுள்ளது.

இதுவரை, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் மருத்துவ நிறுவனத்திடமிருந்து மட்டுமே பெறக்கூடிய இந்த மருத்துவ சான்றிதழை மக்கள் பெற்றுவந்தனர்.

இந்நிலையில் , மக்களின் வசதிக்காக பிராந்திய மருத்துவமனைகள் உள்ளிட்ட அரச மருத்துவமனைகளால் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்தகவல்களை அமைச்சர் திலும் அமுனுகம கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் கனரக வாகனங்கள் தவிர்ந்த மற்ற வாகனங்களுக்கு பிராந்திய மருத்துவ மற்றும் அரச மருத்துவமனைகளில் சான்றிதழ் பெற முடியும் எனவும் அமைச்சர் இதன்போது கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

சுகாதார வழிமுறைகளை பின்பற்றாத பேருந்துகளின் அனுமதிப்பத்திரத்திரம் இரத்து - இலங்கை போக்குவரத்து சபை ...
மக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே வடக்கில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் - வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்...
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை - போதுமானகளவு எரிபொருள் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்ம...