ரயில்வே திணைக்களத்தின் பயன்பாட்டில் 105 இயந்திரங்கள்!

Sunday, November 19th, 2017

தொடருந்துத் திணைக்களத்தின் பயன்பாட்டில் 105 இயந்திரங்கள் உள்ளன என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றில் வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சு பதிலாக ஆளும் கட்சி பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக சபைக்கு இந்தத் தகவலை ஆற்றுப்படுத்தினார்.

தற்போதைக்கு இலங்கை தொடருந்துத் திணைக்களத்துக்கு சொந்தமான இயந்திரங்களில் பயன்பாட்டுக்கு எடுக்கக்கூடிய இயந்திரங்களின் எண்ணிக்கை யாது? எம் 2 மற்றும் எம் 4 ரக இயந்திரங்கள் மிகவும் முக்கியமானதாகும். அந்த ரக இயந்திரங்கள் 27 ஐ பயன்பாட்டிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? ஊழியர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் பிரான்சில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எம் 9 ரக ஒன்பது என்ஜின்களுக்கு என்ன நடந்தது? என்று வாசுதேவ கேள்வி எழுப்பினார்.

இந்த கேள்விக்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சு சபைக்கு ஆற்றுப்படுத்திய தகவலில் தெரிவிக்கப்பட்டதாவதுதொடருந்துத் திணைக்களத்திடம் பயன்பாட்டில்  இயந்திரங்கள் 105 உள்ளன. அவற்றில் எம் 2, எம் 4, எம் 6, எம் 7 ரக இயந்திரங்களே அதிகமாக உள்ளன.

எம் 9 இயந்திரங்கள் ஒன்பது உள்ளன. அவற்றில் கோளாறுகள் ஏற்பட்டால் இந்திய நிறுவனம் ஒன்றால் பழுது பார்க்கப்பட்டு சேவைக்கு உட்படுத்தப்படுகின்றன என்றார்

Related posts: