“ரடொவான் கரடிச்சுக்கு 40 ஆண்டுகள் சிறை”

முன்னாள் போஸ்னிய-செர்ப் இனத் தலைவர் ரடொவான் கரடிச்சை மானுட குலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தார் என்று ஐநா மன்றத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்திருக்கிறது.
இக்கற்றத்தக்காக அவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 1990களில் சரயோவா முற்றுகையின் போது, பொதுமக்கள் இலக்குவைத்துக் கொல்லப்பட்டதில் அவர் வகித்த பங்குக்காக, அவருக்கு எதிரான இந்தத் தீர்ப்பு வந்திருக்கிறது.
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த கரடிச், போஸ்னியப் போரின் போது இனப்படுகொலை செய்தார் என்ற குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், 8,000 முஸ்லீம்களும் சிறுவர்களும் கொல்லப்பட்ட ஸ்ரபரனிட்ஸா படுகொலை தொடர்பாக நீதிமன்றம் இன்னும் தீர்ப்பளிக்கவில்லை. இந்த மோதலில் குறைந்தது சுமார் ஒரு லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர்.
Related posts:
ஃபலூஜா நகரம் மீட்கப்பட்டது - ஈராக் பிரதமர் !
தாய்லாந்தில் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு!
பாகிஸ்தானும் இலங்கையாக மாறும் - எச்சரிக்கும் முன்னாள் பிரதமர் இம்ரான் கான்!
|
|