டீசல் வாகனங்களுக்கு விரைவில் தடை !

Wednesday, September 25th, 2019


பிரான்சில் 2025 ஆம் ஆண்டில் இருந்து டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்சில் டீசல் வாகனங்களுக்கு வரும் ஆண்டுகளில் தடை விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் வரும் 2025-ஆம் ஆண்டு முதல் அனைத்து டீசல் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்படவுள்ளது.

அதில் முதற்கட்டமாக Strasbourg நகருக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதற்கான கால அட்டவணை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ஜனவரி 1, 2021-ஆம் ஆண்டில் இருந்து வகைப்படுத்தப்படாத வாகனங்கள், அதாவது Crit’Air ஒட்டிகள் இல்லாத வாகனங்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்படவுள்ளது.

அதன் பின், ஜனவரி 1, 2022-ஆம் ஆண்டில் இருந்து Crit’Air வகை 5 இலக்கம் கொண்ட டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.

2023 ஆம் ஆண்டில் இருந்து 4 ஆம் CritAir ஒட்டிகள் கொண்ட வாகனமும், 2024 ஆண்டில் இருந்து 3 ஆம் CritAir ஒட்டிகள் கொண்ட வாகனமும் 2025 ஆம் ஆண்டில் இருந்து 2 ஆம் இலக்க CritAir ஒட்டிகளும் கொண்ட டீசல் வாகனங்கள் தடை விதிக்கப்படவுள்ளன.

இந்த தடை Strasbourg நகரில் இருந்து பரிஸ், மார்செய் மற்றும் லியோன் நகரங்களுக்கும் கொண்டுவரப்பட உள்ளதாகவும், பரிஸ் நகரம் தொடர்பான இந்த அறிவித்தல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Related posts: