வெனிசுலாவில் போராட்டத்தின் எதிரொலி – ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை தற்காலிக இடைநிறுத்தம்!

Monday, December 19th, 2016

மக்களது போராட்டத்தை தொடர்ந்து வெனிசுலாவில் 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு தற்காலிகமாக வாபஸ் பெறப் பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் தற்போது பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. உணவு, மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இன்றி பொதுமக்கள் தவிக்கின்றனர். வெனிசுலா நாட்டின் 300 கோடி மதிப்பிலான 100 ரூபாய் நோட்டுகளை அதாவது 100 பொலி வார் நோட்டுகளை கடத்தல்காரர்கள் பதுக்கி வைத்துள்ளதாக அதிபர் நிகோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார். அவை அனைத்தும் அண்டை நாடான கொலம்பியாவின் குகுடா, கார்டா கெனா, மைகாயோ மற்றும் புராமங்கா உள்ளிட்ட நகர குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே நாட்டின் பொருளாதா நிலையை சீரமைக்க 100 பொலிவார் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்தார்.

இதனால் வெனிசுலாவில் கடும் நெருக்கடி ஏற்பட்டது.

புதிய பண நோட்டுகளை வெளியிடுவதற்கு முன்னால் பழைய நோட்டு ஒழிக்கப்பட்டதால், அதை மாற்றிக்கொள்வதற்காக வங்கிகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்துக்கிடந்தனர். ஒரு கட்டத்தில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கக்கூட பணம் இல்லாமல் திண்டாட்டம் ஏற்பட்ட நிலையில், இது மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதன்காரணமாக அவர்கள் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் போன்றவற்றில் நுழைந்து பொருட்களை கொள்ளையடித்தனர். புதிய நோட்டுகள் வர தாமதம் ஏற்பட்டதால் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது.

கொள்ளை சம்பவங்களை அடுத்து கலவரம் மூண்டது. அதில் 3 பேர் பலியாகினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 100 பொலிவார் நோட்டுகளை வீதிகளில் வீசி எறிந்தனர். செல்லாத இந்த நோட்டு இனி எதற்கு என கோஷம் எழுப்பினர். நாட்டில் பொதுமக்களின் கொந்தளிப்புக்கு வெனிசுலா அரசு பணிந்தது. உடனடியாக 100 பொலிவார் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

நிக்கோலஸ் மதுரோ நேற்று  பேசுகையில், வெளிநாடுளில் உள்ள எதிரிகளின் சதியால் புதிய 500, 2 ஆயிரம், 20 ஆயிரம் பொலிவர் நோட்டுகள் 3 விமானங்களில் எடுத்துவருவது தாமதம் ஆகி உள்ளது என கூறினார். மேலும் 100 பொலிவர் நோட்டுகள் வாபஸ் பெறும் முடிவை நிறுத்தி வைத்து அறிவிப்பு வெளியிட்டார். வெனிசுலாவில் 40 சதவீத மக்களுக்கு வங்கிக்கணக்கு இல்லை. எனவே மின்னணு பண பரிமாற்றம் செய்ய இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. வருகிற ஜனவரி 2-ந் தேதி வரை 100 பொலிவார் நோட்டுகள் செல்லும் என அறிவிக்கப்பட்டது. பழைய பொலிவார் நோட்டுகளை மாற்றிக் கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

201612181503485423_Venezuela-delays-100-bolivar-banknote-withdrawal_SECVPF

Related posts: