மீண்டும் இணைந்த துருவங்கள்:  கொரிய தீவகர்ப்பத்தில் நம்பிக்கை கீற்று!

Saturday, May 26th, 2018

வட கொரிய – தென்கொரிய நாடுகளின் தலைவர்கள் மீண்டும் சந்தித்துள்ளனனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான யுத்த சூனிய பகுதியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் மற்றும் தென் கொரிய தலைவர் மூன் ஜே ஆகியோருக்கு இடையில், விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வடகொரியாவுடனான சந்திப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரத்து செய்துள்ள நிலையில், குறித்த சந்திப்பை மீண்டும் நடத்துவதற்காகவே இரு நாட்டு தலைவர்களும் சந்தித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதியுடனான, வடகொரிய தலைவரின் சந்திப்பு வியாழக்கிழமை நடைபெறவிருந்த நிலையில், அது அமெரிக்காவினால் இரத்துசெய்யப்பட்டு எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: