பயணிகள் படகு விபத்து – பிலிப்பைன்ஸ் பலி எண்ணிக்கை உயா்வு!
Monday, August 5th, 2019
மத்திய பிலிப்பைன்ஸ் பிரதேசத்தில் கடும் கடல் சீற்றம் காரணமாக மூன்று பயணிகள் படகுகள் மூழ்கிய விபத்தில் பலியானோா் எண்ணிக்கை 31 ஆக உயா்ந்துள்ளது.
கைமாரஸ் நீரிணையில் ஏற்பட்ட இந்த அனர்த்தங்களின் போது 63 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தொிவிக்கின்றன.
திடீர் என ஏற்பட்ட கடும் காற்று மற்றும் பாரிய அலைகள் காரணமாகவே இந்த அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தங்கள் குறித்த புகைப்படங்கள் சில பிலிப்பைன்ஸ் செஞ்சிலுவை சங்கத்தினால் சமூக வலையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
Related posts:
சர்ச்சையில் சிக்கிய மலேசிய நிதியத்தின் நிர்வாகம் பதவிவிலக முடிவு!
குவைத்தின் மன்னர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடக தகவல்!
மகா கும்பமேளா நிகழ்வில் 300 கிமீ நீள போக்குவரத்து நெரிசல்!
|
|
|


