ஹகிபிஸ் புயல்- 2000 விமானங்கள் இரத்து!

ஜப்பானின் டோக்கியோ உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஹகிபிஸ் புயல் தாக்க உள்ளதால், சுமார் 2000 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜப்பானை நெருங்கி வரும் ஹகிபிஸ் புயல் காரணமாக தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கடும் மழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த புயல் கிரேட்டர் டோக்கியோ பகுதி உள்ளிட்ட பசிபிக் கடற்கரையோர பகுதிகளை இன்று மாலை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மோசமான வானிலை நிலவுவதால் சர்வதேச விமானங்கள், உள்நாட்டு விமானங்கள் என 1929 விமானங்கள் இரத்து செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
Related posts:
ஹிலாரிதேர்தலில் தோற்க நான் காரணமா? -பதிலடி கொடுத்த புடின்!
காபுலில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கோரம்: 60க்கு மேற்பட்டோர் பலி !
ஜீ 7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இத்தாலியை பயணம்!
|
|