கடந்த 24 மணித்தியாலத்தில் தமிழகத்தில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று!

Saturday, June 13th, 2020

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 11 ஆயிரத்த 458 பேருக்கு கொவிட்-19 தொற்றுதியாகியுள்ளது.

இதன்படி, இந்தியாவில் நாளொன்றில் அதிக கொரோனா நோயாளர்கள் நேற்றைய நாளில் பதிவாகியுள்ளனர்.3 இலட்சத்து 8 ஆயிரத்து 993 பேருக்கு இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 884 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களிலேயே கொரோனா தொற்றுறுதியான அதிகமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியான நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காம் இடத்திலுள்ளது.இறுதியாக கொரோனா தொற்றுறுதியானவர்களில் அதிகமானோர் மஹராஷ்ட்ரா மாநிலத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அந்த மாநிலத்தில் மாத்திரம் கொரோனா தொற்றுறுதியான 3 ஆயிரத்து 493 பேருக்கு நேற்று தொற்றுறுதியாகியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய மஹராஷ்ட்ரா மாநிலத்தில் இதுவரையில் ஒரு லட்சத்து ஆயிரத்து 141 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது. இதேவேளை மஹராஷ்ட்ரா மாநிலத்தை தொடர்ந்து இந்தியாவின் தமிழகத்தில் கொரோனா தொற்றுறுதியான அதிகமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரையில் 40 ஆயிரத்து 698 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

அங்கு கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 982 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

இதேவேளை தமிழகத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 18 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இதற்கமைய தமிழகத்தில் இதுவரையில் 367 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 77 லட்சத்து 40 ஆயிரத்து 505 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 4 லட்சத்து 28 ஆயிரத்து 346 பேர் இதுவரையில் பலியாகியுள்ளனர்.எவ்வாறாயினும் 39 லட்சத்து 66 ஆயிரத்து 582 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: