130 விமானிகளுக்கு விமானம் ஓட்ட முடியாத சூழல்!

Wednesday, July 10th, 2019

ஆங்கிலம் பேசத் தெரியாததால் சுவிட்சர்லாந்தில் சுமார் 130 விமானிகள் விமானம் ஓட்ட முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜூன் மாதம் 20ஆம் திகதி அறிமுகம் செய்யப்பட்ட ஒரு புது விதியின்படி, Skyguide நிறுவனத்தினால் கண்காணிக்கப்படும் அனைத்து விமானங்களின் விமானிகளும், விமானம் புறப்படும்போதும் சரி, தரையிறங்கும்போதும் சரி, விமான கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் Sion விமான நிலையத்தில் பணியாற்றும் சுமார் 130 விமானிகள் விமானம் ஓட்ட முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. பிற உள்ளூர் விமான நிலையங்களான, Les தூplatures மற்றும் La Chaux-de-Fonds விமான நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

Neuchtel இல் உள்ள விமான நிலையம், மற்றும் Ticino விலுள்ள உள்ளூர் விமான நிலையங்களுக்கு மட்டும் இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் விமான சட்டத்தில் செய்யப்பட்ட சட்ட திருத்தம், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அந்த நேரத்தில், தவறாக புரிந்து கொள்ளுதல்களை தவிர்ப்பதற்காகவே, ஆங்கிலத்தை மட்டுமே விமான சேவை தகவல் தொடர்பு விடயங்களில் பயன்படுத்த உத்தரவிட்டதாக பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில் ஃபெடரல் கவுன்சில் தெரிவித்தது. இந்நிலையில், இந்த புதிய விதியை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related posts: