ஹிலாரிதேர்தலில் தோற்க நான் காரணமா? -பதிலடி கொடுத்த புடின்!

Sunday, December 25th, 2016

அமெரிக்காவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் தோற்றுவிட்டு என்னை திட்டுவதா என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்.

அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் 8ம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.

இவருக்கு ஆதரவாக ரஷ்யா இருந்ததாகவும் விளாடிமிர் புடினின் செயல்பாடுகளே தோல்விக்கு காரணம் எனவும் ஹிலாரி கிளிண்டன் குற்றம் சாட்டினார்.

இந்த தேர்தல் முறையில் ரஷ்யாவை சேர்ந்த ஹேக்கர்கள் நுழைந்து மோசடி செய்து விட்டதாக கிரீன் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்டீன் குற்றம் சாட்டி இருந்தார். இதே குற்றச்சாட்டைத்தான் எட்வர்ட் ஸ்னோடனும் கூறியிருந்தார். இந்நிலையில் தேர்தலில் தோற்றுவிட்டு என்னை திட்டுவதா என கூறியுள்ளார் விளாடிமிர் புடின்.

மேலும் கூறுகையில் நீங்கள் தோற்றுவிட்டீர்கள் நாங்கள் எந்தவொரு விதிமீறலையும் செய்யவில்லை. டிரம்ப் மக்களின் மனநிலையை நன்கு புரிந்து வைத்துள்ளார் அமெரிக்கா உடனான உறவை சீராக வைத்துக் கொள்ளவே விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

துருக்கியில் ரஷ்ய தூதர் இறந்ததற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் பெர்லின் தாக்குதலில் உயிரிழந்த நviladimir_clintonபர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

Related posts: