ஹகிபிஸ் புயல் : வெள்ளத்தில் மூழ்கிய புல்லட் ரயில்கள்!

Tuesday, October 15th, 2019

ஜப்பானில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான ஹகிபிஸ் புயல் தாக்கியதில் குறைந்தது 23 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த புயலின் காரணமாக இதுவரை 17 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. நகனோ நகரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் உலக புகழ்ப்பெற்ற ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில்கள் பாதி மூழ்கிய நிலையில் காணப்படுகின்றன.

இந்நிலையில், புயலின் பாதிப்பில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பல்லாயிரக்கணக்கான இராணுவ வீரர்களும், மீட்புதவியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடுமையான சேதங்களை விளைவித்த ஹகிபிஸ் புயல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வலுவிழந்ததுடன், நிலப்பகுதியை விட்டு விலகி சென்றுவிட்டதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, ஜப்பானின் வரலாற்றில் முதல் முறையாக, ஒரு 48 மணிநேர காலத்தில் அதிகபட்ச மழையாக ஹகோன் எனும் பகுதியில் ஒரு மீட்டர், அதாவது 100 சென்டிமீட்டர் மழை கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமையில் மட்டும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts: