பாகிஸ்தானின் சர்வதேச விமானநிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு!

Thursday, April 12th, 2018

பாகிஸ்தானில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 20ஆம் திகதி மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் மிகப்பெரிய சர்வதேச விமானநிலையம் இஸ்லாமாபாத் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானநிலையத்தின் கட்டுமான பணிகள் 2007-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு விமானநிலையம் கட்டி முடிக்கப்பட்டது. சடார் மற்றும் ராவால்பிந்தி ஆகிய இரு நகரங்களை இணைத்து இந்த விமானநிலையம் அமைந்துள்ளது.

குறித்த விமானநிலையம் பாகிஸ்தானின் சர்வதேச விமானங்களில் மிகப்பெரியதாக இருக்கும். இதன் மூலம் ஏராளமான மக்கள் பயன்பெறுவர் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: