மருத்துவமனையில் ட்ரம்ப் – வட கொரிய அதிபர் விடுத்துள்ள செய்தி!

Saturday, October 3rd, 2020

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவியும் கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய வேண்டும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபரின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவும் நேற்று கொரோனா பரிசோதனைசெய்தனர்.

அதில் இருவருக்குமே கொரோனா தொற்று பரவி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ட்ரம்புக்கு லேசான காய்ச்சல் நீடித்து வந்தது. இதையடுத்து, அவர் வோல்டர் ரேட் இராணுவ மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ட்ரம்ப் மேற்கொள்ளவிருந்த அதிபர் தேர்தல் பிரசார நிகழ்ச்சிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குணமடைய பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும், அவரது மனைவி மெலனியா ட்ரம்பும் கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வடகொரிய அரசு ஊடகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது வருத்தமளிப்பதாக அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு விரைவில் குணமடைய தனது வாழ்த்துக்களை அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைய வடகொரிய அதிபர் கிம் வாழ்த்து தெரிவித்துள்ள சம்பவம் உலக அரசியலில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தபடுகிறது.

Related posts: