டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக நாளை பதவியேற்பு!

Thursday, January 19th, 2017

45 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் நாளை (20) பதவி ஏற்கவுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட, டொனால்ட் டிரம்ப் தனது 70 ஆவது வயதில் நாளை வொஷிங்டனில் பதவி ஏற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“மீண்டும் அமெரிக்காவை மாபெரும் நாடாக்குவோம்” என்ற தொனிப்பொருளில் அமெரிக்க ஜனாதிபதி பதவி ஏற்பு விழா நடைபெறவுள்ளது.இதனையடுத்து ஜனாதிபதி பராக் ஒபாமா தனது பதவிக்காலத்தின் போது இறுதி முறையாக நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டார்.

இதன்போது மத்திய கிழக்கின் இரு மாநிலங்கள் குறித்து முன்வைக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் தாம் பெரிதும் அச்சம் அடைவதாக தெரிவித்துள்ளார். ஐ.நா சபையின் தீர்மானம் தொடர்பில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் விழிப்பாக இருக்கவேண்டும் எனவும் அவர் இதன்போது அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்கும்போது இரண்டு பைபிள்களை பயன்படுத்தி உறுதி மொழி எடுக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.டிரம்ப் பதவியேற்பு விழாவினையொட்டி அமெரிக்காவில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனை ஒபாமா நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டார்.

பதவியேற்பு விழாவை நேரில் காண்பதற்காக வொஷிங்டனில் அமெரிக்கர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வருகின்றனர். இந்நிலையில், டிரம்ப் பதவியேற்பு விழாவையொட்டி, அவரது ஆதரவாளர்கள் வொஷிங்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

trump

Related posts: