தென் சீனக்கடலில் தொடரும் பதற்றம் – பிலிப்பைன்ஸ் கப்பல் மீது சீனா பீரங்கி தாக்குதல்!

Wednesday, May 1st, 2024

தென் சீனக் கடலில் சென்று கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் சரக்கு கப்பல் மீது சீன கடலோர காவல் படையின் கப்பல் தண்ணீர் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் காரணமாக நேற்று (30.04.2024) தென் சீனக் கடலில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து பிலிப்பைன்ஸ் நாட்டு அதிகாரி ஒருவர்  தெரிவிக்கையில், சீனாவின் கடலோரக் காவல்படை தென் சீன கடலில் சென்று கொண்டிருந்த எங்களது பிலிப்பைன்ஸ் கப்பலைநேற்று காலையில் நீர் பீரங்கிகளால் 8 முறை தாக்குதல் நடாத்தியது.

கப்பலின் உபகரணங்கள் சேதமாகி உள்ளது. சீனாவின் அனுமதியின்றி இக்கடல் பகுதியில் எந்த கப்பலும் செல்ல கூடாது என சீன கடலோர காவல் படை மிரட்டி வருகிறது.

சீன கடலோரக் காவல் படையின் துன்புறுத்தல் மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கதக்கது என கூறியுள்ளார்.

000

Related posts:


அவசியமான நேரத்தில் முழுமையான உதவிகளை வழங்குமாறு கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளிடம் வெளிவிகார அ...
மற்றொருமுறை கலவரம் கட்டுமீறிப் பரவுகின்ற நிலைமை உருவானால் சமூக இணையத் தளங்களை கட்டுப்படுத்த வேண்டிவர...
பாதாள உலக குழு உறுப்பினர்கள் நாட்டை விட்டு வெளியேற அவர்களது சட்டத்தரணிகளே காரணம் - பொதுமக்கள் பாதுகா...