அவசியமான நேரத்தில் முழுமையான உதவிகளை வழங்குமாறு கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளிடம் வெளிவிகார அமைச்சர் கோரிக்கை!

Friday, June 3rd, 2022

அவசியமான நேரத்தில் தமது முழுமையான உதவிகளை வழங்குமாறு கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளிடம் வெளிவிகார அமைச்சர் கோரியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், கொழும்பை தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளுக்கு நேற்றையதினம் வெளிவிவகார அமைச்சில் வைத்து விளக்கமளித்துள்ளார்.

இதன்போது இலங்கையில் நிலவும் நிலைமை மற்றும் எரிபொருள், எரிவாயு, அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் மற்றும் மின்வெட்டு போன்ற அழுத்தமான பிரச்சினைகளை உள்ளடக்கிய அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்களை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான நிலைமையை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளை விரிவாக எடுத்துரைத்த வெளிவிவகார அமைச்சர், தேவைப்படும் நேரத்தில் தமது முழுமையான உதவிகளை வழங்குமாறு தூதுவர்களை கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்றத்தில் உள்ள அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தையும், அந்த முக்கியமான சட்டத்தின் சில முக்கிய அம்சங்களையும் தூதுவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளார்.

இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் குறிப்பாக சவாலான ஒரு கட்டத்தில் தமது ஆதரவையும் நல்லெண்ணத்தையும் வழங்குமாறு தூதுவர்களை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இதன்போது மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் இதன்போது சுருக்கமான விளக்கங்களை முன்வைத்து கேள்விகளுக்கு பதிலளித்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

கொவிட் - 19 தடுப்பு மருந்தேற்றல் திட்டம் - இரண்டாவது தடுப்பூசி வழங்கல் தொடர்பில் பணிப்பாளரின் அறிவிப...
3,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது - நாளைமறுதினம்முதல...
எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய காலத்தில் 13 இலட்சம் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளன -அமைச்சர் கஞ்சன விஜேசேக...

வேலணை பிரதேச சபை உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல் – கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் பொலிஸில் முற...
நாட்டில் கையிருப்பில் உள்ள அத்தியாவசிய உணவு பொருட்களின் தொகை குறித்து மதிப்பீடு - சந்தை, வணிக மற்றும...
விசாரணைகள் நிறைவடைவதற்கு முன்னரே பொலிஸாரால் பகிரங்கப்படுத்தப்பட்டது தகவல் - உண்மைத் தன்மை தொடர்பில் ...