வேலணை பிரதேச சபை உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல் – கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் பொலிஸில் முறைப்பாடு!

Monday, July 30th, 2018

கூட்டமைப்பின் வேலணை பிரதேச சபை உறுப்பினரான வசந்தகுமாரை தொலைபேசியில் கொலைமிரட்டல் விடுத்ததாக தெரிவித்து மற்றொரு கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினரான நாவலனின் சகோதரர் குணாளனுக்கு எதிராக ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் விகிதாசார முறையில் தெரிவான உறுப்பினர்களை தரம்குறைத்தும் உறுப்பினர்களின் சிறப்புரிமையை பாதித்து அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை வெளியட்டமையால் அது சபையின் ஒட்டுமொத்த உறுப்பினர்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான வசந்தகுமார் கடந்த சபை அமர்வில் கருத்து முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் சபையில் கடந்த 26 ஆம் திகதி பெரும் அமளிதுமளியேற்பட்டது. இதனையடுத்து சபை இன்றையதினம் வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இன்றையதினம் சபையில் விஷேட அமர்வு  சபையின் தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் கூடியது.

இதையடுத்து நாவலனின் சகோதரர் குறித்த உறுப்பினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரை கொலை செய்துவிடும் வகையில் அச்சுறுத்தியுள்ளார் என்றும் இதனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்து இன்றையதினம் சபையில் உறுப்பினர் வசந்தகுமார் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த விடயம் உள்ளிட்ட அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொள்ள சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து ஊர்காவற்று பொலிஸ் நிலையத்தில் குறித்த உறுப்பினரின் சகோதரருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: