எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய காலத்தில் 13 இலட்சம் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளன -அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!.

Friday, February 16th, 2024

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய காலத்தில் எரிபொருள் களஞ்சியப்படுத்தல் மற்றும் எரிபொருள் விநியோகம் என்பனவற்றுடன் தொடர்புடைய 13 இலட்சம் தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சிய முனைய நிறுவனத்தின் எரிபொருள் களஞ்சியப்படுத்தல் மற்றும் எரிபொருள் விநியோகம் என்பனவற்றுடன் தொடர்புடைய 13 இலட்சம் தகவல்கள் பிரதான தரவுக் கட்டமைப்பிலிருந்து அழிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாறான தரவு அழிப்புச்  செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக  எரிபொருள் நெருக்கடி நிலவிய 2022 ஆம் ஆண்டிலேயே பெருமளவான தரவு அழிப்புச்  செயற்பாடு இடம்பெற்றுள்ளது” என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: