3,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது – நாளைமறுதினம்முதல் எரிவாயுவை விநியோகிக்க முடியும் லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!.
Monday, May 30th, 2022
3,500 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்நதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
எனினும் நாளை வரையில் சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நாளைமறுதினம்முதல் எரிவாயுவை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்..
இதன் காரணமாக இன்றும் நாளையும் எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருப்பதை தவிர்க்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, எரிவாயு அடுப்புக்கு மாற்றீடாக சில அடுப்புகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற போதிலும் அவற்றின் விலை அதிகரித்து காணப்படுகிறது. அத்துடன் சில அடுப்புகளுக்காக பயன்படுத்தப்படும் கரியின் விலையும் தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
Related posts:
பாதுகாப்புச் சேவை வழங்கலில் யாழ்.பல்கலையில் முறைகேடு - கோல்டன் ஈகிள் குற்றச்சாட்டு!
இழப்பீடு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்!
மசகு எண்ணெய் ஏற்றிய 2 கப்பல்கள் அடுத்த மாதம் இலங்கையை வந்தடையும்!
|
|
|


