இழப்பீடு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல்!
Saturday, May 19th, 2018
உலக வங்கியின் உதவியுடன் கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறைக்கான தார்க்கலவைசாலை அமைப்பதற்கு காணிகளை வழங்கிய பொதுமக்களுக்கான இழப்பீடு வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.
உலக வங்கியின் நிதிப் பங்களிப்புடன் கொடிகாமத்திலிருந்து தென்மராட்சி பிரதேசத்திற்குட்பட்ட முள்ளி வரையான பகுதிகளில் தார்க்கலவைச்சாலை அமைப்பது தொடர்பாக கடந்த வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் பிரகாரம் காணிகளுக்கான பெறுமதி விலை மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் மதிப்பீடு செய்யப்பட்டு வழங்கப்பட்ட காணிகளுக்கான பெறுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக அலுவலர்கள் முன்னிலையில் காணி உரிமையாளர்கள் தனித்தனியாக அழைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
Related posts:
பண்டாரநாயக்கா விமான நிலையத்தில் நால்வர் கைது!
காரைநகர் மாணவி தற்கொலை என மருத்துவ அறிக்கை தெரிவிப்பு!
வேலணையில் தரம் 6 புதுமுக மாணவர்களை ஊக்குவிக்க கொழும்பு லயன்ஸ் கழகம் விசேட நடவடிக்கை!
|
|
|


