பண்டாரநாயக்கா விமான நிலையத்தில் நால்வர் கைது!

Sunday, August 7th, 2016

பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க வரி செலுத்தாது இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான செல்போன்கள் உட்பட இலத்திரனியல் பொருட்களுடன் நான்கு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாமின் அதிகாரிகள் குழுவொன்று மேற்கொண்ட தேடுதலில் விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் பிரதான வாயிலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 309 செல்போன் மற்றும் டெப்கள், சிப்கள், செல்போன் உதிரி பாகங்கள், சிகரட்டுக்கள், முக அழங்கார திரவியங்கள் என்பன அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றின் பெறுமதி இரண்டு கோடியே 34 இலட்சத்து 33 ஆயிரத்து 978 ரூபா என அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் மேலதிக விசாரணைகளுக்காக சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். சுங்க அத்தியட்சகர் சந்தேக நபர்களுக்கு 21 இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளார்.

Related posts:

தீப்பற்றிய எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலின் எஞ்சியுள்ள பாகங்களை தேடும் பணிகள் முன்னெடுப்பு!
சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் இன்றுமுதல் வழமைக்கு திரும்பின - பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட ம...
எரிபொருள் பெற்றுக் கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவிப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்க...