மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியை நிறுத்த முடிவு!

Saturday, July 23rd, 2016

மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.370, கடந்த 2014–ம் ஆண்டு மார்ச் மாதம் 8–ந் திகதி கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 227 பயணிகளும், 12 சிப்பந்திகளும் இருந்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த விமானம், நடுவானில் மாயமானது.

அதைத் தேடும் பணி தொடர்ந்து நடந்துவந்தது. ஆனால் 327 நாட்கள் தேடலுக்கு பின்னர் எந்த பலனும் இல்லாத நிலையில், அந்த விமானம் விபத்துக்குள்ளாகி விட்டதாகவும், அதில் பயணம் செய்த 239 பேரும் கூண்டோடு பலியாகி விட்டதாகவும் மலேசியா கடந்த ஆண்டு ஜனவரி இறுதியில் அறிவித்தது. ஆனாலும் அதை தேடும் பணி தொடர்ந்தது.

இப்போதைய நிலவரப்படி, இந்தியப் பெருங்கடலின் தென் பகுதியில் 1 லட்சத்து 20 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 135 மில்லியன் டாலர் செலவில் தேடும் பணி முடிந்துள்ள நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தற்போது எந்த பகுதியில் தேடல் நடக்கிறதோ அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாவிட்டால், அந்த விமானத்தை தேடும் பணியை முடிவுக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதை மலேசியா, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் கூட்டாக நேற்று அறிவித்தன.

Related posts: