வீதி விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தும் சாரதிக்கு தூக்கு தண்டனை!

Wednesday, August 8th, 2018

வீதி விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தும் வாகன சாரதிகளுக்கு தூக்குத்தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் நடைமுறைப்படுத்த பங்களாதேஷ் அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த 29 ஆம் திகதி நடந்த விபத்தில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். அதிவேகமாக வந்த வாகனம் மோதியதில் அவர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே, வீதி பாதுகாப்பு சட்டத்தை மறுசீரமைப்பு செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
உயிரிழப்பு ஏற்படுத்துவோருக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முக்கியமாக வலியுறுத்தப்பட்டது.
கடந்த 10 நாட்களாக தலைநகர் டாக்காவில் நடந்த போராட்டத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 8 பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
மாணவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பங்களாதேஷ் அரசு முடிவு செய்தது. அதை தொடர்ந்து மாணவர் பிரதிநிதிகளை அழைத்து அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதன் போது வீதி விபத்தில் உயிரிழப்பு ஏற்படுத்தும் வாகன சாரதிகளுக்கு தூக்குதண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்படும் என உறுதி அளித்தனர்.

Related posts: