கொடிய உயர்கொல்லி நோயின் தாக்கம் அதிகரிப்பு –  கேரளாவில் 9 பேர் பலி!

Tuesday, May 22nd, 2018

நிப்பா (nipah) தொற்று காரணமாக தென் இந்திய கேரளாவில் ஒன்பது பேர் பலியாகியுள்ளதாக சுகாதாரதுறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது தவிர, இந்த நோய் தொற்று அறிகுறிகளுடன் மேலும் 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கோளிகோடு பிரதேச அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மிருகங்களிடம் இருந்து தொற்றும் இந்த நோய்க்கான உறுதியான மாற்று மருந்து இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. இந்த நோய் தொற்றுக்கு உள்ளாகும் நோயாளிகளின் இறப்பு விகிதம் 70 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் மிகவும் பாரதூரமான பத்து தொற்று நோய் பட்டியலில் நிப்பாவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த தொற்று, வௌவால்களால் பரவியுள்ளதாக கேரள மாநிலத்தில் சுகாதார செயலாளர் ராஜீவ் சந்தனந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த தொற்றுக்கு உள்ளாகி மூன்று பேர் மரணித்த வீட்டில் இருந்து சுகாதார அதிகாரிகள், வௌவால் உண்ட மாம்பழங்களை கைப்பற்றியுள்ளனர்.

அந்த பழங்களை ஆய்வுக்கு உட்படுத்திய போது, நிப்பா நோய் அவற்றின் மூலமே பரவியுள்ளமை தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: