பிரேசிலின் தென்கிழக்கு பகுதியில் கடும் புயல் – உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்வு!

Monday, March 25th, 2024

பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்ட புயல் தாக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்வடைந்துள்ளது.

பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் நேற்றுமுன்தினம் கடுமையான புயல் தாக்கம் ஏற்பட்டது. ரியோ டி ஜெனிரோவின் மலைப்பகுதிகளில் புயலில் தாக்கம் அதிகமாக இருந்ததாகவும் இதனைத் தொடர்ந்து அங்கு கடும் மழை பெய்ததாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

புயல் மற்றும் மழைத் தாக்கத்தினால் குறித்த பகுதியில் அமைந்துள்ள பல வீடுகள் சேதமடைந்ததோடு, 25 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. மேலும், நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்படப்பட்டுள்ளது.

தற்போது குறித்த பகுதியில் மீட்பு நடவடிக்கைள் தொடரும் நிலையில், அரசாங்கம் முகாம்களில் இருப்போருக்கான நிவாரணங்களையும் வழங்கி வருகிறது. மேலும், மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பல ஆறுகள் பெருக்கெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசிலில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத வகையில் கடுமையான வெப்பமான காலநிலை நீடித்து வந்த நிலையிலேயே, தற்போது அங்கு புயலின் தாக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: