புவி வெப்பமடைதலுக்கு எதிராக பல நாடுகளில் போராட்டம்!

Saturday, September 21st, 2019

புவி வெப்பமடைதலுக்கு எதிராக உலகளாவிய ரீதியாக பல நாடுகளிலும் நேற்றைய தினம் போராட்டங்கள், மற்றும் கவனயீர்ப்பு பேரணிகள் இடம்பெற்றன.

ஸ்வீடனைச் சேர்ந்த 16 வயது மாணவியும், காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாட்டாளருமான க்றெரா துன்பேர்க்கின், காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கை காரணமாக உலகம் முழுவதும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

புவி வெப்பமடைதலுக்கு எதிராக க்றெரா, கடந்த 2018ஆம் ஆண்டு பாடசாலைக்கு செல்வதைத் தவிர்த்து போராட்டத்தை ஆரம்பித்தார்.

அவரது போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட பெருமளவான மாணவர்கள் மற்றும் இளைஞர்களும் அதில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில், மனித நடவடிக்கைகளினால் ஏற்படும் புவி வெப்படைதலுக்கு எதிராக அனைத்துலக ரீதியில் இடம்பெறும் பாரிய போராட்டமாக அது மாறியுள்ளது.

குறித்த போராட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்துள்ள க்றீரா, எங்கள் வீடு தீப்பிடிக்கிறது. நாங்கள் அதனை ஒதுங்கியிருந்த பார்த்துக்கொண்டிருக்கமாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts: