டிரம்ப் ஜனாதிபதியானதால் இத்தாலியில் குடிபெயரவிருக்கும் பிரபல ஹாலிவுட் நடிகர்?

Saturday, November 12th, 2016

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் தெரிவானதை அடுத்து பிரபல ஹாலிவுட் நட்சத்திரம் ராபர்ட் டி நீரோ இத்தாலியில் குடிபெயர்வது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ருள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போது இவர் தெரிவித்த பல்வேறு கருத்துகளுக்கு அமெரிக்க நடிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது அது டிரம்பிற்கு எதிரான எதிர்ப்பை காட்டும் கலவரமாக பல பகுதிகளிலும் மாறியுள்ளது.

கடந்த புதன் அன்று தனியார் ஊடகம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நீரோ, தாம் இத்தாலியில் குடிபெயர்வது குறித்து யோசித்து வருவதாக வேடிக்கையாக பேசினார்.

தற்போது நீரோவின் இந்த கருத்தை அறிந்த இத்தாலியின் Ferrazzano மேயர், நடிகர் நீரோவை வரவேற்க காத்திருப்பதாக தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என்றும், இது நடந்தால் அது பெரும் மகிழ்ச்சியே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசார காலகட்டத்தில் டிரம்பை கடுமையாக சாடியவர் நீரோ. அதிகம் வாய் பேசும் டிரம்பின் முகத்தில் குத்துவேன் என்றும் நீரோ பேசியிருந்தார்.நடிகர் நீரோவின் மூதாதையர்கள் அனைவரும் இத்தாலியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.625.0.560.320.500.400.194.800.668.160.90

Related posts: