தீவிரவாதத்தால் ஆப்கான் பள்ளிகளில் இருந்து வெளியேறிய 25 லட்சம் குழந்தைகள்!

Friday, March 25th, 2016

ஆப்கானிஸ்தானில் எழுச்சி பெற்று வரும் தலிபான் தீவிரவாதிகளுடன் அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது. இதனால் ஆப்கானிஸ்தானில் உள்ள பள்ளிகளில் கடந்த ஆண்டுகளில் மட்டும் 25 லட்சம் குழந்ததைகள் தங்கள் படிப்பை தொடராமல் வெளியேறி உள்ளனர்.இதனால் 100க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன.

ஆப்கானிஸ்தான் கல்வித்துறை அமைச்சகம்  கடந்த 6 மாதங்களில் 200 பள்ளிகள்  மூடப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது.
ஆப்கானிஸ்தான் கல்வித்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் முஜீப் மெகர்தாத் கூறும் போது  நாட்டில் 24 மாகாணங்களில் கடந்த் ஒரு ஆண்டில் 714 பள்ளிகள் மூடபட்டு உள்ளன. பாதுகாப்பு படைகள் ராணுவ நடவடிக்கைகளுக்காக  பல பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதை உள்துறை அமைச்சகம் ஒப்பு கொண்டு உள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 2015 ஆம் ஆண்டு நடந்த் 111 மோதல் சம்பவங்களில் கல்வி மிகவும் பாதிக்கபட்டு உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்து உள்ளது.இது போன்ற மோதல்களில்4 பொது மக்கள் உயிர் இழந்தால் அதில் ஒரு குழந்தை உள்ளது. இவ்வாறு கடந்த ஆண்டு மட்டும் 733 குழந்தைகள் இதுபோன்ற மோதல்களில் பலியாகி உள்ளனர்.

Related posts: