6 வாரக் குழந்தை கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு – பிரித்தானியாவில் 31 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலி!

Saturday, May 9th, 2020

பிரித்தானியாவில் நேற்று ஒரே நாளில் 626 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், பிறந்து 6 வாரமான குழந்தையும் அதில் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் தொடர்ந்து கொரோனா பலி எண்னிக்கை குறைந்து வருவதாக கூறும் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான நிர்வாகம், எதிர்வரும் திங்களன்று முதல் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இங்கிலாந்தில் 332 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அத்துடன் தொடர்ந்து ஸ்கொட்லாந்து 49, வேல்ஸ் 28, வடக்கு அயர்லாந்து 5 என பதிவாகியுள்ளது. இதில் பிறந்து 6 வாரங்களேயான குழந்தை ஒன்றும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் குழந்தை தொடர்பில் மேலதிக தகவல்கள் ஏதும் வெளியிட என்.எச்.எஸ் நிர்வாகம் மறுத்துள்ளது.

இதனிடையே பிரித்தானியாவில் உள்ள முதியோர் இல்லங்களில் இருந்து பலி எண்னிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால், கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கொரோனாவால் ஏற்பட்ட பலி எண்ணிக்கையில், இந்த வாரம் பிரித்தானியா இத்தாலியை மிஞ்சியதாக தெரியவந்துள்ளது.

அதன்படி, பிரித்தானியா தற்போது ஐரோப்பாவில் கொரோனா பலி எண்ணிக்கை அதிகம் கொண்ட நாடாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இணையத்தளங்களின் பாதுகாப்பு குறித்து அவதானிக்குமாறு கணனி அவசர கண்காணிப்பு பிரிவு அறுவுறுத்தல்!
முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு தென் கொரிய அரசாங்கம் ஒத்துழைக்கும் – ஜனாதிபதியிடம் தென்கொரிய...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்களின் எண்ணிக்கை ஏழாக குறைக்கப்படும் - கல்வி அமைச...