இலங்கை வருகிறார் ஜப்பானிய வெளியுறவு அமைச்சர்

Friday, December 29th, 2017

யப்பான் வெளிவிவகார அமைச்சர் டாரோ கொனோ 2018 ஜனவரி 5ஆம் திகதி இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

யப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஒருவரின் இலங்கைக்கான  இந்த விஜயம் 15 வருடங்களின் பின்னர் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் டாரோ கொனோ , ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்திக்கவுள்ளார். இதேவேளை , வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவுடன் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

அரசியல், பொருளாதார, வர்த்தக மற்றும் முதலீட்டுத் துறைகளில் யப்பான் மற்றும் இலங்கை சுமூகமான உறவுகளை பேணி வருகின்றன. இலங்கையின் முன்னணி அபிவிருத்தி பங்காளர்களில் ஒன்றாக யப்பான் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: