யாழ் மாநகர முதல்வரின் பிரத்தியேக ஆளணிக்கு ஆப்பு வைத்த சபை உறுப்பினர்கள் – குழப்பத்தில் ஆர்னோல்ட்!

Wednesday, June 24th, 2020

யாழ் மாநகர சபையின் முதல்வர் ஆர்னோல்ட் தனது பிரத்தியேக செயற்பாடுகளை கையாள்வதற்காக உள்வாங்கிய தற்காலிக உதவியாளர்களை தொடர்ந்தும் பணியில் வைத்திருப்பதா இல்லையா என்று நிதிக்குவின் பரிந்துரைக்கு அமைய கொண்டுவரப்பட்ட முன்மொழிவு இன்றையதினம் தோற்கடிக்கப்பட்டது.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஆர்னோல்ட் தனது முதல்வர் பதவிக்காலத்தில் பிரத்தியேக தேவைகளை மேற்கொள்வதற்கான 6 உதவியாளர்களை சபையின் அனுமதி பெறாது தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் உள்வாங்கியிருந்தார்.

இந்நிலையில் ஆர்னோல்ட் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதை அடுத்து சபையின் அதிகாரங்கள் மற்றும் வளங்களை தனது தேர்தல் பிரசார நடவடிகக்கைகளுக்கு பயன்படுத்தியதை அடுத்து தேர்தல்  திணைக்களத்தீனூடாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி எற்கனவே நிறுத்தப்பட்டிருந்தது.

ஆனாலும் அவரது உதவியாளர்களாக செயற்பட்ட 6 பேரும் ஆர்னோல்ட்டின் தேர்தல் பிரசார வேலைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துவந்தனர்.

இந்நிலையில் தொடர்ந்தும் அந்த உதவியாளர்களை பணியில் வைத்திருக்க முடியாது என சபையின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் போர்கொடி தூக்கியதை அடுத்து நிதிக்குழு அது தொடர்பில் ஆராய்ந்து இன்றைய சபை கூட்டத்தில் குறித்த ஆளணியினர் தெர்டர்பில் தீர்மானிக்கமாறு சபை உறுப்பினர்களை கோரியிருந்தது.

இந்நிலையில் குறித்த 6 பேரையும் தொடர்ந்து சேவையில் வைத்திருப்பதா அல்லது நீக்குவதா என்று தீர்மானிப்பதற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிய் உள்ளிட்ட எதிர் தரப்பினர் பிரேரணையை எதிர்த்து வாக்களித்ததை அடுத்த குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 15 உறுப்பினர்களும் எதிராக 17 உறுப்பினர்களும் வாக்களிதிருந்த நிலையில் குறித்த முன்மொழிவு 2 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சபையின் பதில் முதல்வராக செயற்பட்ட ஈசன் இன்றைய அமர்வை ஆர்னோல்ட்டின் தொலைபேசி தொடர்பாடல் ஊடாக வழிநடத்தி தனது ஆற்றல் மற்றும் ஆளுமையின்மையை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: