வடகொரியா மீது அதிகபட்ச அழுத்தம்: மூன்- ட்ரம்ப் ஒப்புதல்
Tuesday, August 8th, 2017
வடகொரியா மீது அதிகபட்ச அழுத்தங்களை பிரயோகிப்பது தொடர்பில் ஒத்துழைப்புகளை மேம்படுத்துவது தொடர்பில் தென்கொரியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே ஒப்புதல் எட்டப்பட்டுள்ளது.
தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையே இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போதே இவ்வாறு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இம்மாத இறுதியில் முன்னெடுக்கப்படவுள்ள கூட்டு இராணுவ பயிற்சிக்கு பின்னரும், வடகொரியாவை கட்டுப்படுத்துவதற்கான தமது ஒத்துழைப்பு தொடரும் என இருநாட்டு தலைவர்களும் உடன்பட்டதாக தென்கொரிய ஜனாதிபதியின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு வடகொரியாவிற்கு இன்னும் காலஅவகாசம் உள்ளது. எனவே, ஏவுகணை சோதனைகளை கைவிட்டு வடகொரியா பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் எனவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
|
|
|


