ஜனாதிபதி விளாடிமிர் புடின் 87.8 சதவீத வாக்குகளுடன் சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்கு பின்னராக வரலாற்று வெற்றி – உத்தியோகபூர்வ முடிவுகள் இன்றையதினம் வெளியாகும் என தகவல்!

Monday, March 18th, 2024

ரஷ்யாவின் ஜனாதிபதி தேர்தல் நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில் அதன் உத்தியோகபூர்வ முடிவுகள் இன்றைய தினம் வெளியாகும் என எதிர்பார்ப்படுகிறது.

எவ்வாறாயினும், நடைபெற்று முடிந்த ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி விளாடிமிர் புடின் 87.8 சதவீத வாக்குகளுடன் சோவியத் ஒன்றிய வீழ்ச்சிக்கு பின்னராக ஒரு வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளதாக முதற்கட்ட அதிகாரப்பூர்வ முடிவுகள் தெரிவிக்கின்றன.

1999 ஆம் ஆண்டில் லெப்டினன்ட் கேர்ணலான விளாடிமிர் புடின் ரஷ்யாவின் ஜனாதிபதியாக முதல் தடவை பதவியேற்றார்.

இந்தநிலையில், முதற்கட்ட முடிவுகளுக்கமைய ரஷ்யாவில் நீண்ட காலம் பதவியில் இருந்த ஜனாதிபதி என்ற சாதனையை தமது ஆறாவது பதவி காலத்தில் விளாடிமிர் புட்டின் தமதாக்கவுள்ளார்.

அதன்படி, எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதி புதிய ஜனாதிபதியின் பதவி பிரமாணம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், சிறைச்சாலையில் விஷம் ஏற்றி கொல்லப்பட்டதாக கூறப்படும் ரஷ்ய எதிர்க்கட்சி பிரமுகரும் தீவிர புட்டின் விமர்சகருமான அலெக்ஸி நவல்னியின் ஆதரவாளர்கள் பலர் வாக்களிப்பு நிலையங்களுக்கு வெளியில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.=

வாக்கெடுப்பின் இறுதி நாளில் ரஷ்ய நகரங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளான யுக்ரைனின் ஸபோரிஸியா, கெர்சன், டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் மற்றும் கிரிமியா ஆகிய பகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: