2023ஆம் ஆண்டில் 99 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனம் – பத்திரிகையாளர் பாதுகாப்பதற்கான குழு தெரிவிப்பு!

Saturday, February 17th, 2024

உலக நாடுகளில் 2023ஆம் ஆண்டில் 99 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் பத்திரிகையாளர் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது. இவர்களில் 72 பத்திரிகையாளர்கள் பலஸ்தீனர்களெனவும் அக்குழு தெரிவித்துள்ளது. காசாவில் இவ்வளவு பெருந்தொகையில் பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டிருக்காவிட்டால், கடந்த வருடம் உலகில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை முன்னைய வருடங்களை விட குறைவாக காணப்பட்டிருக்குமெனவும், பத்திரிகையாளர் பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.

காசா – இஸ்ரேல் யுத்தத்தின் முதல் 03 மாதங்களில் நாடொன்றில் ஒரு வருடத்தில் கொல்லப்பட்டதை விட அதிகமான பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதை தாம் ஏற்கெனவே தெரிவித்திருந்ததாகவும், பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு தெரிவித்துள்ளது.

காசாவில் கொல்லப்பட்ட 77 பத்திரிகையாளர்களில் 72 பேர் பலஸ்தீனர்கள். 03 பேர் லெபனானை சேர்ந்தவர்கள். 02 பேர் இஸ்ரேலியர்களென, Committee to Protect Journalists தெரிவித்துள்ளது.

பத்திரிகையாளர்களுக்கான அச்சுறுத்தல் என்ற விடயத்தை பொறுத்தவரை காசா யுத்தம் முன்னொரு போதும் இல்லாத அச்சுறுத்தலாக காணப்படுவாக, பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழுவின் ஜோடி கின்ஸ்பேர்க் தெரிவித்துள்ளார்.

இந்த யுத்தத்தை பொறுத்தவரை காசா பத்திரிகையாளர்களால் மாத்திரமே காசாவுக்குள் என்ன நடைபெறுகின்றதென்ற செய்தியை வெளியுலகுக்கு தெரிவிக்க முடியுமென்பதை மனதில் கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ள அவர், சர்வதேச பத்திரிகையாளர்களுக்கு காசாவுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய இராணுவத்தினர் அழைத்துச் சென்றால் மாத்திரமே சர்வதேச பத்திரிகையாளர்களால் அங்கு செல்ல முடியுமெனவும், அவர் குறிப்பிட்டுள்ளார். ஆகவே செய்திகளை வெளிக்கொணர்வதற்காக தமது உயிர்களை பணயம் வைக்கும் பலஸ்தீன பத்திரிகையாளர்களையே நம்பியிருப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

காசா யுத்தத்தின் போது பலஸ்தீன பத்திரிகையாளர்களுக்கு போதிய ஆதரவின்மை தொடர்பாக தான் ஏமாற்றமடைந்துள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார். இது இஸ்ரேல் முன்னெடுத்துள்ள யுத்தமென்பதால் காசாவில் இலக்கு வைக்கப்படுபவர்கள், கொல்லப்படுபவர்களுக்கான ஆதரவை வெளியிட மேற்குலகம் தயங்குவதாகவும் தெரிவித்துள்ள அவர், இஸ்ரேல் இந்த யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் சர்வதேச ஊடகங்கள் பிளவுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: