ரஷ்ய தடகள வீரர்கள் 271 பேருக்கு அனுமதி!

Friday, August 5th, 2016

இன்று ஆரம்பமாகவுள்ள றியோ ஒலிம்பிக் போட்டிகளில், ரஷ்யாவின் 271 தடகள வீரர்கள் பங்கேற்க முடியும் என சர்வதேச ஒலிம்பிக் செயற்குழு தெரிவித்துள்ளது.

அரச ஆதரவுடன் ஊக்கமருந்துப் பாவனை இடம்பெற்றதாகக் கூறப்பட்டதையடுத்து, ரஷ்யாவுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என உலக ஊக்கமருந்து தடுப்பு முகவரகம் பரிந்துரைத்தபோதும், சமர்ப்பிக்கப்பட்ட 389 தடகள வீரர்களில், மூன்றிலிரண்டு பங்குக்கு அதிகமானோர் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கருத்துத் தெரிவித்த ரஷ்யாவின் ஒலிம்பிக் செயற்குழுத் தலைவர் அலெக்ஸான்டர் ஸுக்கோவ், ஒலிம்பிக்கில் மிகத் தூய்மையான அணி ரஷ்யா எனத் தெரிவித்துள்ளார்.

தவிர, இது படுமட்டமான நீதி எனத் தெரிவித்த அவர், ஊக்கமருந்துப் பிரச்சினையுடன் எப்போதும் தொடர்புபடாத யெலினா இசிபயோவா போன்றோர் ஒலிம்பிக்கில் பங்கேற்றக முடியாதுள்ள நிலையில், ஊக்கமருந்துத் தடையை எதிர் நோக்கிய அமெரிக்க ஓட்ட வீரரான ஜஸ்டின் கட்லின் போன்ற பலர் ஒலிம்பிக்கில் பங்கேற்கின்றனர் என மேலும் தெரிவித்தார்.

Related posts: