வடகொரியா மீண்டும் மீண்டும் ஏவுகணை சோதனை

Friday, April 1st, 2016

கடந்த மாதம்   வட கொரியா  ஏவுகணைகள் சோதனை நடத்தியதால் தென்கொரியா ஜப்பான் உள்ளிட்ட  நாடுகளுக்கு அச்சத்தையும் மிரட்டலையும் ஏற்படுத்தியது.  கொரிய தீபகற்பகத்தில் பதட்டத்தை உருவாக்கியது.  இதற்கு அமெரிக்கா மற்றும் ஐ.நா. சபை கண்டனம்  தெரிவித்ததுடன் வடகொரியா மீது பொருளாதார தடையும் விதித்துள்ளன.. ஆனால் அதை பொருட்படுத்தாத வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் இன்று மீண்டும்  மற்றொரு ஏவுகணை சோதனையை வடகொரியா  நடத்தியது. சான்டோக் நகரின் கிழக்கு பகுதியில் நள்ளிரவு 12.45 மணிக்கு (இலங்கை நேரப்படி  அதிகாலை 3.45 மணிக்கு) இந்த ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது.இந்த ஏவுகணை 1300 கி.மீ. தூரம் சென்று ஜப்பானை நொடிப்பொழுதில் தாக்கிவிட முடியும் எனவும் கூறப்படுகிறது.

ஆனால் அந்த ஏவுகணையின் விசை வீச்சு  அளவு க தெரியவிக்கப்படவில்லை.இந்த தகவலை தென் கொரிய ராணுவ அமைச்சகம் உறுதி செய்துள்ளது.  இதனால் கொரிய  தீப கற்பகத்தில் மீண்டும் பேர்  பதட்டம் ஏற்பட்டுள்ளது.

வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஒபாமா எற்பாடு  செய்துள்ள அணுபாதுகாப்பு மாநாடு  2 நாள்  நடக்கிறது. இச்சமயத்தில் வடகொரியா மீண்டும்  ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.  எனவே இதுகுறித்து சீனா தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Related posts: