குற்றவாளிகளை பரோலில் விடுதலை செய்ய துருக்கி அரசு திட்டம்?

Wednesday, August 17th, 2016
தங்கள் நாட்டில் உள்ள 38,000 குற்றவாளிகளை, அவர்களின் தண்டனை காலத்திற்கு முன்னதாகவே பரோலில் விடுவிக்க உள்ளதாக துருக்கி அரசு கூறியுள்ளது.
கொலை, பாலியல் குற்றம் மற்றும் பயங்கரவாதம் போன்ற குற்றங்களை செய்தவர்கள் மட்டும் இந்த பரோல் விடுதலையில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இவ்வாறு அதிகளவில் குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதன் நோக்கத்தை அரசு தெரிவிக்கவில்லை.
ஆனால், துருக்கியில் கடந்த மாதம் தோல்வியடைந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சிக்கு பிறகு , காவலில் வைக்கப்பட்டுள்ள பல ஆயிரக்கணக்கான மக்களை தங்க வைப்பதற்கு இடம் உண்டாக்குவதே அதிகளவில் குற்றவாளிகள் பரோலில் விடுதலை செய்யப்படுவதன் நோக்கம் என்று பிபிசியின் துருக்கி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடந்தது தொடர்பாக 2000-க்கும் அதிகமான போலீஸ் அதிகாரிகளையும், நூற்றுக்கணக்கான ராணுவத்தினரையும் அவர்களின் பதவியிலிருந்து நீக்கும் ஆணைகளை அரசு ஏற்கனவே பிறப்பித்துள்ளது.

Related posts: