சீனாவின் அதிரடி முடிவு – அமெரிக்க பொருட்களுக்கான வரி அதிகரிப்பு!

Tuesday, April 3rd, 2018

தமது நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்படுகின்ற 128 அமெரிக்க பொருட்களுக்கு சீனா அதிகரித்த வரியை விதிக்க தீர்மானித்துள்ளது.

சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்கின்ற இரும்பு, அலுமினியம் ஆகிய பொருட்களுக்கான வரியை அண்மையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகரித்திருந்தார்.இதனால் சீனா, கனடா போன்ற நாடுகள் பாதிப்பை சந்தித்தன.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே சீனா அமெரிக்காவின் பொருட்களுக்கு தற்போது 25 சதவீதத்துக்கும் அதிகமான வரியை அறவிட தீர்மானித்துள்ளது.

அமெரிக்க வரி அதிகரிப்பினால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.

Related posts: